ரி20 உலகக் கிண்ண தொடரில் பங்கெடுத்திருந்த இலங்கை அணி வீரர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியதீவுகளில் நடைபெற்று வரும் ஐசிசி T20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, லீக் சுற்றில் தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் இலங்கை தோல்விகண்டது.
அத்தோடு நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்த போதிலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்திருந்தது.
இந்நிலையில் இலங்கை அணி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.