பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் நில்போவல பகுதியில் இன்று (02) பிற்பகல் பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேருந்து கொஸ்லாந்தையிலிருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்தவேளையில், ஹாலிஎல பகுதியில் இருந்து பண்டாரவளை பக்கமாக சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஹாலிஎல உடுவர பகுதியை சேர்ந்த முச்சக்கரவண்டியின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்தின் அதிக வேகமே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கும் ஹாலிஎல பொலிஸார் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளனர்.