கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மஹரகம வரை நீரை எடுத்துச் செல்லும் பிரதான குழாயின் திருத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
நேற்று (17) அதிகாலை 2 மணியளவில் ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில் கார் ஒன்று மோதியதில் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபட்டதுடன், குழாயின் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, இன்று (18) அதிகாலை 2 மணிக்கு பின்னர் நீர் விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த சில மணித்தியாலங்களில் தொலைதூர பகுதிகளுக்கான நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர் கசிவு காரணமாக கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலன்வத்த மற்றும் மத்தேகொட ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.