உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (05) அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு அதன் கருப்பொருள் ‘நில சீர்திருத்தம், பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மை’ என்பதாகும்.
1973 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் நிறுவப்பட்டது, உலக சுற்றுச்சூழல் தினம் என்பது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட மிகப்பெரிய சர்வதேச நிகழ்வாகும்.