இங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படல் வேண்டும். பாராளுமன்றத் தேர்தல் நடாத்துவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது. எனவே நாட்டினுடைய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் முதலிலே ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களது எல்லேரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. அற்கான வேலைத்திட்டங்கள்தான் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஞாயிற்றுக்கிழமை(16) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலார்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
தேர்தல்கள் தொடர்பில் பொதுவாக ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றார்களே தவிர அவை உத்தியோக பூர்வமாக அரசாங்கத்தினுடையதோ, அல்லது ஜனாதிபதியினுடைய கருத்தாக இல்லை. ஜனாதிபதியோ, பிரதமரோ, அல்லது சம்மந்தப்பட்ட அமைச்சர்களோ, அதுதொடர்பில் உத்தியோக பூர்வமான கருத்துக்களை வெளியிடாத சூழல் காணப்படுகின்றது. ஆனால் தனிப்பட்ட ரீதியான கருத்துக்கள் அவை காணப்படுகின்றன. எது எவ்வாறாக இருந்தாலும் முதலிலே ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படல் வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்;ப்பாகவுள்ளது.
நாடு ஒரு பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இந்த அளவிற்கு மீளக் கட்டியெழுப்பப் பட்டிருக்கின்றது. ஐ எம் எவ் ஊடனான வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நாடு மெல்ல மெல்ல பொருளாதாரத்திலே எழுச்சி கண்டு வருகின்றது. அது இன்னும் முழுமை பெறவில்லை. ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் முழுமை பெறும்பொழுது இந்த நாடு இருந்ததை விட இன்