Our Feeds


Saturday, June 29, 2024

Sri Lanka

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்ததை குடித்து இருவர் பலி..!


 தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர்.


மேலும் நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்தார்.


தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட “டெவோன்” என்ற பல்நாள் மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நேற்று (28) இரவு கடலில் மிதந்து வந்த போத்தல்கள் சில இவர்களுக்கு கிடைத்துள்ள நிலையில், அதனை மதுபானம் என நினைத்து அருந்தியுள்ளனர்.


இதன்போது, குறித்த 06 மீனவர்களும் சுகயீனமடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் செய்தி அனுப்பும் இயந்திரங்கள் ஊடாக அவர்கள் அறிவித்ததாகவும் கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »