எண்ணெய் வரிசை உருவானதா அல்லது உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச மிகுந்த நம்பிக்கையுடன் ஆட்சிக்கு வந்தார் எனவும் மகிந்த ராஜபக்ச காலத்தில் இருந்த அபிவிருத்தி வரும் என எதிர்பார்த்ததாகவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட மதவாச்சி தொகுதி மாநாட்டில் உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
"போராட்டத்திலிருந்து வீழ்ந்த நாட்டை மீட்டெடுக்க விரும்பினோம். வரிசைகளை அகற்றி, மின்வெட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்ப்பார்த்தோம்.
சிறுவர்கள் எதிர்பார்க்கும் தொழில்நுட்பத்துடன் மக்களுக்கு சேவைகளை வழங்கும் சகாப்தத்தை உருவாக்க வேண்டும். அத்தகைய வளர்ச்சியடைந்த உலகிற்கு நமது நாட்டை கொண்டு செல்ல எதிர்பார்க்கிறோம்.
சில அரசியல் கட்சிகள் இரு தரப்பாகப் பிரிந்து வாக்குவாதம் செய்கின்றன. நாங்கள் செயல்பட்ட ஒரு அரசியல் கட்சி. ” என தெரிவித்தார்.
மேலும், மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே எமது நாட்டின் பலமான அரசியல் சக்தியாக நாம் நம்புகின்றோம்.
இந்த நாட்டின் அடுத்த தலைமுறை அரசியல் சக்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன. இந்த நாட்டின் பிள்ளைகளின் நாளைக்கான பொறுப்பை ஏற்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொறுப்புடன் தெரிவித்துள்ளது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.