தொலைத்தொடர்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் இன்று (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன்படி, தொலைத்தொடர்பு திருத்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு ஏற்புடையதாக இல்லை என்றும், உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியபடி திருத்தப்பட வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சில சரத்துக்கள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.