Our Feeds

Friday, June 14, 2024

SHAHNI RAMEES

இ.தொ.காவின் முக்கியஸ்தர் சஜித்துடன் இணைந்தார்...!

மத்திய மாகாண சபையின் உப தவிசாளராக இரண்டு தடவைகளும், அவைத் தலைவராக பதவி வகித்தவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தவிசாளரும், 25 வருடங்களுக்கும் மேலாக கண்டி மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள துரை மதியுகராஜா இன்று(14) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

1991 இல் கண்டி மாநகர சபைக்கு அதிகூடிய வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்ட இவர், 1994 ஆம் ஆண்டும் 1997 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபை உறுப்பினராகவும், 2001 இல் உப தவிசாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2002 ஆம் ஆண்டு மத்திய மாகாண சபையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 40000 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற ஆசனத்தை இழந்தாலும், மீண்டும் 2004 இல் மத்திய மாகாண சபையின் அவைத் தலைவராக பதவி வகித்தார். அத்துடன், 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மத்திய மாகாண சபைக்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டு அதன் தவிசாளராகவும் பதவி வகித்தார். மேலும், 3 பாராளுமன்றத் தேர்தல்களில் தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதானியாகவும், தொழிலாளர் கல்விப் பொறுப்பாளராகவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் யாப்புத் திருத்தக் குழுவின் உறுப்பினராகவும், மாகாண எல்லை நிர்ணயக் குழுவின் உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்தவராவார்

 இ.தொ. கவின் துரை மதியுகராஜா சஜித்துடன் இணைந்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »