அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட பாலஸ்தீன - இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஐ.நா பாதுகாப்பு சபையில் 14 க்கு 0 என்ற வாக்கு விகிதத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்த நிலையில் ரஷ்யா மாத்திரம் வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என அறிவித்துள்ள நிலையில், பாலஸ்தீன அரசாங்கமான ஹமாசும் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என அறிவித்துள்ளது.
ஆனால், தற்போதும் பாலஸ்தீனத்தில் அப்பாவிகளுக்கு எதிராக இஸ்ரேல் பாரிய தாக்குதல்களை தொடர்கிறது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.