பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரமளித் திருக்கிறது.
ஜனாதிபதி ரணில் தலைமையில் நேற்று(19) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரங்களை பெறுவோர் திறைசேரிக்கு 10 வீத வரியை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் இடப்படவுள்ளது.
அந்த வரி தொடர்பான விபரங்களை திறைசேரி அறிவிக்கவுள்ளது.