பறவைக் காய்ச்சல் பதிவாகியுள்ள எந்தவொரு நாட்டிலிருந்தும் விலங்குகள் அல்லது விலங்கு சார்ந்த உற்பத்தி பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
பல நாடுகளில் மீண்டும் தலைதூக்கியுள்ள பறவைக் காய்ச்சல் நோய்க்கிருமி நுண்ணுயிர் நுழைவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக அமெரிக்காவில் கால்நடைகளுக்கு இடையில் இந்த நோய் பதிவாகியமை மிகவும் ஆபத்தான நிலை என்றும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டில் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதால் பறவைக் காய்ச்சல் குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.