2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திற்கு பதிலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்லயில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இவ்வருடம் தேர்தல் வருடம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, 2025ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்காக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.