இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் புதிய அரசியல் அலுவலகத்தை கொழும்பில் நேற்று (06) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.