இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44 மேலதிக
வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி ஆதரவாக 109 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையில் 44 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.
உத்தேச புதிய மின்சாரச் சட்டம் மற்றும் உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பாராளுமன்றத்தின் எரிசக்தி மேற்பார்வைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது.