அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (13) மேற்கிந்திய தீவுகள் செல்லவிருந்த இலங்கை அணி வெள்ளம் மற்றும் மழை காரணமாக புளோரிடாவில் இருந்து வெளியேற முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய வானிலை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இலங்கை அணி நாளை (14) மேற்கிந்திய தீவுகள் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அணி ஆரம்ப சுற்றில் பங்கேற்கும் இறுதிப் போட்டி ஜூன் மாதம் 17 ஆம் திகதி நெதர்லாந்துக்கு எதிராக செயின்ட் லூசியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.