போலி நாணயத்தாள்களை தன்வசம் வைத்திருந்த ஒருவர்
தம்புத்தேகம நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.தம்புத்தேகம நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவர் நின்று கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் குறித்த நபரைச் சோதனைக்குட்படுத்தியபோது அவரின் பணப்பையிலிருந்து ஆறு ஐநூறு ரூபா போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர் நொச்சியாகம அம்பகஹவெவ பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்ததுடன் சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது அவரது நண்பரொருவரினால் இந்தப் போலி நாணயத்தாள்கள் கிடைத்ததாகப் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் இன்னும் சில நண்பர்களுடன் சேர்ந்து போலி நாணயத்தாள்களை அச்சிட்டு புழக்கத்திலுள்ள பணத்துடன் சேர்த்து பரிமாற்றத்தில் விட்டிருக்கலாமெனவும் அது தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
பொசன் காலத்தில் போலி நாணயத்தாள்கள் அநுராதபுரம் உள்ளிட்ட பிரதான நகரங்களில் பரிமாற்றத்தில் விடப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதுடன் இது தொடர்பில் பொது மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.