Our Feeds


Friday, June 14, 2024

Zameera

தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள் - சாணக்கியன்


 மின்சாரக் கட்டணம், எரிபொருட்களின் விலை என்பன குறைபக்கப்பட்டாலும் கூட, மக்கள் வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில் தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்பதை ஜனாதிபதி அறிந்து வைத்திருக்க வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுதல், பொதுசன வாக்கெடுப்பை நடாத்துதல், போன்ற கருத்துக்கள் அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாக உள்ளன. இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் நேற்று வியாழக்கிழமை(13) மாலை மட்டக்களப்பு களுதாவளையில் வைத்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஒருவருட காலத்திற்கு ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு பாராளுமன்றத்திலே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றால் அதற்குரிய சூழ்நிலை இருக்கின்றது. பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தையும் இன்னும் ஒரு வருடத்தினால் நீடிப்பதற்றாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினால் ஜனாதிபதி முதன் முறையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியவர்கள், பாராளுமன்றத்தையே இனிமேலும் கனவாக வைத்திருக்கும் பின்வரிசை, முன்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஜனாதிபதி பேச்சுவார்த்தை ஒன்று நடந்ததாக  வாந்தி ஒன்றை நாமும் கேள்விப்பட்டிருந்தோம்.

அரசியல் அமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தினதும், ஜனாதிபதியினதும் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்தால் நீடிப்பது தொடர்பாகத்தான் அதில் பேசப்பட்டதாக எமக்கும் சொல்லப்பட்டது.

இலங்கையில் மக்கியமான சட்டமூலங்கள் பாராளுமன்றத்திலே கொண்டுவரப்பட்டபோது. அதனை பாராளுமன்றத்திலே வாக்கெடுப்பக்கு விட்டபோது அரசாங்கத்திற்குச் சார்பாக 125 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருந்தது. அதற்கா பாராளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவதென்பதை அனைவரும் அறிந்த விடையம். 20 வது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்போகும்போது எதிர்க்கட்சியிலிருந்து ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் விலை கொடுத்து வாங்கியதாகவும் பலரால் பேசப்படும் விடையம். இந்நிலையில் ஜனாதிபதி தனக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றாரா என்ற சந்தேகம் இருக்கின்றது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிற்போடப்பட்டுள்ளது, மாகாணசபைத் தேர்தல் 2017 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்படவில்லை. நாட்டில் ஜனநாயகம் என்ற ரீதியில் ஜனநாயகத்திற்கு மாறாக தேர்தல்கள் பிற்போடப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் எதிர்வருகின்ற தேர்தல்களும் பிற்போட்டப்பட்டால் மக்கள் ஜனநாயக ரீதியில் தமது எதிர்ப்பை பதிவு செய்ய முடியாமல் போனால், ஜனநாயக்திற்கு மாறான வழியில் தமது எதிர்ப்பபை பதிவு செய்வதற்கு மக்கள் தள்ளப்படுவார்கள்.

தற்போது நாட்டிலே பொருளாதார நிலமைக்கு மத்தியில் மக்கள் பொறுமையாக இருப்பதற்குரிய காரணம், மிகவிரைவாக ஜனாதிபதித் தேர்தல் வரும் அதிலே ஆட்சிமாற்றம் உருவாகும் அதன் பின்னர் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டு மக்களுடைய வாழ்வாதாரம் மேம்படும் என்ற நம்பிக்கையில்  புதிய அரசாங்கம்  உருவாகும் என்ற நம்பிகையில் அமையதியாக இருக்கின்றார்கள்.

ஆனால் தற்போது கண்துடைப்பாக மின்சார கட்டணம், எரிபொருட்களின் விலை என்பன குறைபக்கப்பட்டாலும் கூட, மக்கள் வாழ முடியாத அளவிற்கு விலைவாசிகள் அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில தேர்தல்களைப் பிற்போட்டால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்பதை ஜனாதிபதி பதிந்து வைத்திருக்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »