vகச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் எவ்வித பேச்சுவார்தைகளும் இடம்பெறவில்லையென இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.
பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் விரிவான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டிருந்தது.
எனினும், அவ்வாறான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லையென இலங்கை வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.