மேலும் சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களும் உள்ளனர். இது குறித்து மக்களுக்கு அதிகம் தெரியாது. பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் தொழிநுட்ப சாதனம் இருக்குமாக இருந்தால், இந்த தரவுகளை அணுக முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று நாட்டில் காலை வாரும் விளையாட்டே நடந்து வருகிறது. இந்த தரப்பினரில் ஒருவருடன் மாத்திரம் இணக்கப்பாட்டை மேற்கொள்வதன் மூலம் வங்குரோத்து நிலையிலிருந்து வெளிவர முடியாது. சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களுடன் எமது நாடு நிலையான எந்தவொரு இணக்கப்பாட்டையும் மேற்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 263 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா, வத்தளை, தெலகபாத, ஸ்ரீ ரதனபால மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 26 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர், பிள்ளைகள் மற்றும் குடிமக்களுக்கு ஸ்மார்ட் சாதன வசதிகள் இருந்தால் உண்மையான தரவு மற்றும் தகவல்களின் அடிப்படையில் அறிவியல் ரீதியான முடிவுகளை எடுக்கும் திறன் ஏற்படும்.
ஆவேசமான முடிவுகளை எடுத்து செயற்படுவதை தவிர்க்க முடியும். தரவுகளை மையமாகக் கொண்டு முடிவுகளை எட்ட முடியும். ஸ்மார்ட் சாதனத்தின் பெறுமதிகளில் இதுவும் ஒன்றாகும். ஸ்மார்ட் சாதனங்கள் மூலம் தகவல்களை, உண்மையான தரவுகளை, உண்மைச் சம்பவங்களை உடனே அறியும் திறன் கிட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
உலகில் தலைசிறந்த நட்சத்திர நடிகர்கள் இருந்தாலும், எமது நாட்டில் ஆட்சியாளர்களே சிறந்த நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். எமது ஆட்சியாளர்கள் அமிதாப் பச்சனையும் தாண்டிய நடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, உண்மையை உண்மையாக உடனே அறிய வேண்டியது மக்களின் பொறுப்பாகும். இந்த அரசாங்கம் சில தரவுகளை மறைத்துள்ளது. ஊழியர் சேமலாப நிதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் கூட இதுவரை வெளியிடப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேல்தட்டு வர்க்கத்தை உயரி மட்டத்தில் கருத்தில் கொண்டு உழைக்கும் மக்களை இந்த அரசு புறக்கணித்து செயற்பட்டு வருகிறது. இந்த முறையை மாற்ற வேண்டும். இதற்கு, குடிமக்கள் தகவல்கள் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்கு அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரம் முக்கியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கடத்தல்காரர்களினதோ அல்லது சூதாட்டக்காரர்களினதோ உதவி பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களுக்கு கிடைப்பதும் இல்லை அவர்களை நாம் நாடுவதும் இல்லை.
பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வளங்களை வழங்கும் போது கசினோ உரிமையாளர்கள் மற்றும் கடத்தல்காரர்களால் பணம் வழங்கப்படுவதாக போலிப் பிரச்சாரமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான சேறுபூசும் நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் இப்பாடசாலைகளின் குறைபாடுகளை கண்டுகொள்வதில்லை. வெறும் வீராப்பு பேசியே வருகின்றனர். தற்போதைக்கு நாட்டுக்கு தலைவர்கள் அதிகரித்து விட்டார்கள். பெரும்பான்மையானவர்கள் வாய்ச் சொல் தலைவர்களாக இருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி வீராப்பு அடிக்காமல் செயலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவையாற்றி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த திட்டங்களுக்கு மோசடியில் ஈடுபடுபவர்கள் அல்லது சூதாட்ட உரிமையாளர்கள் உதவுவதில்லை. எமது நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டிலுள்ளவர்களே நன்கொடையாக இதற்கான உதவிகளை செய்து வருகின்றனர். சுரண்டலில் ஈடுபடாது, இலஞ்சம் பெறாமல் பணிபுரியும் தரப்புகளுக்கு உதவுகளை நல்க ஏராளமானவர்கள் உள்ளனர். இவையனைத்தும் பிள்ளைகளுக்கு உதவும் எண்ணப்பாட்டிலயே செய்து வருகின்றனர். பிள்ளைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக அமைந்து காணப்படுகிறது என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாடசாலைகளில் குறைபாடுகள் இருந்தாலும், செல்லப்பிள்ளை திட்டங்களுக்காக அரசு கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறது.
பாடசாலைகளுக்கு வளங்களை வழங்க அரசிடம் பணம் இல்லாவிட்டாலும், வங்குரோத்தான நாட்டில் கூட, அரசின் செல்லப்பிள்ளை திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது.
நாட்டின் பாடசாலை பிள்ளைகள் குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. நாட்டின் ஆட்சியாளர் தனது சொந்த பிள்ளைகள் குறுத்து சிந்திப்பது போன்றே நாட்டின் சகல பிள்ளைகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.