சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் வறக்காப்பொல, நவுகல பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் உரிய தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான சீரற்ற வானிலையால் பல அனர்த்தங்கள் ஏற்பட்டுவருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.