Our Feeds


Thursday, June 20, 2024

Anonymous

ஈரானின் புரட்சி இராணுவத்திற்கு கனடா தடை விதிக்க திட்டம் - நடப்பது என்ன?

 



ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவப் பிரிவான “ஈரானிய புரட்சி இராணுவத்தை” பயங்கரவாத குழுவாக அறிவிக்க கனடா தீர்மானித்துள்ளது.


கனேடிய எதிர்க்கட்சி மற்றும் ஈரானிய புலம்பெயர்ந்தோர் அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கனேடிய பிரஜைகள் மற்றும் இராஜதந்திரிகளை ஈரானில் இருந்து விலக்கிக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஈரானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஈரானிய புரட்சிப் படையின் உயர்மட்ட அதிகாரிகள் கனடாவுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.


ஈரானிய புரட்சிகர இராணுவம் ஈரானின் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பெரிதும் தலையிடுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »