Our Feeds


Monday, June 10, 2024

SHAHNI RAMEES

பரீட்சைகளை விரைவாக முடித்து பல்கலைக்கழக அனுமதியை துரிதப்படுத்த நடவடிக்கை...! - கல்வி அமைச்சர்




 க.பொ.த சாதரான தர பரீட்சை நிறைவு செய்த உடனேயே உயர்தர

கல்வியை ஆரம்பித்து பல்கலைக்கழகத்திற்கான நுழைவை துரிதப்படுத்துவதன் மூலம் மாணவர்களின் நேரத்தை வீணடிப்பதை தடுக்க கல்வி அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.


உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மதிப்பீடு செய்யும் நிகழ்வில் கல்வி அமைச்சர் தலைமையில் இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அதன்படி, 16 வயது முடிந்ததும் உயர்தர கல்வியும், 18 வயதை எட்டியவுடன் பாடசாலைக் கல்வியை முடித்து பல்கலைக்கழக நுழைவதற்கான வாய்ப்புகளைத் திறக்கும் நோக்கில், இதுவரை விடுபட்ட கற்கைகளை நிறைவு செய்வதற்காக இரண்டு குழுக்கள் பல்கலைக்கழக அமைப்பில் ஒரே நேரத்தில் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »