வங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபார் தீவுகளுக்கருகே
5.7 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏதுமில்லையென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.