Our Feeds


Saturday, June 29, 2024

Sri Lanka

நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என்று காத்திருக்கின்றனர்..!


 நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்த போது ஓடுவதற்கு செருப்பு தேடி ஓடிய எதிர்கட்சிகள், நாட்டுக்காக சவால் விடும் ஒரே ஒருவரின் காலை இழுத்துக்கொண்டு நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என்று காத்திருக்கின்றனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு இந்துக் கல்லூரி விளையாட்டரங்கில் நேற்று (28) நடைபெற்ற ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் மற்றும் மக்களின் பொறுமையை உதாரணமாகக் கொள்ள வேண்டும்.


அதே பொறுமை அந்த அரசியல்வாதிகளுக்கு இருந்திருந்தால் நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடையும் போது ஓடியிருக்கமாட்டார்கள், வீழ்ச்சியடையும் போது அவர்கள் பார்த்து கொண்டிருந்தார்கள். ஓடும் காலணிகளுக்கு, சவால்களை ஏற்று எப்படி ஓடுவது.


நாட்டு மக்களை நேசித்து பொறுப்புகளை ஏற்காமல் தமது நியமனங்களையும் பதவிகளையும் பார்த்துக்கொண்டனர். இந்த மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் சவால்களில் இருந்து “கையாலாகாதவர்கள்” மற்றும் “தற்பெருமைக்கார்கள்” கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றது.


நாடு வீழும் போது, மக்கள் உணர்வை வலுப்படுத்தாமல் மக்களை வீழ்த்த முயலும் தலைவர்கள் பலர் நம் நாட்டில் உள்ளனர்.


மின்சாரம் இல்லாமல் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்ல முடியவில்லை. எரிபொருள் இல்லாமல் பேருந்தில் பயணிக்க முடியவில்லை. இந்நிலையில் பாடசாலை மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.


தற்போது இந்த தொழிற்சங்கங்கள் மீண்டும் ஒருமுறை பாடசாலைகளை மூடுவதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த நாட்டின் பிள்ளைகளின் கல்வியை சீர்குலைத்தால், நமக்கு எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான்.


இந்த சூழ்நிலையில் எப்பொழுதும் எதிர்ப்புத் தெரிவித்தும், வேலைநிறுத்தம் செய்தும், நாட்டின் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டை போடும் நயவஞ்சகக் குழுவை, மட்டக்களப்புக்குக் அழைத்து வந்து தனிமைப்படுத்த வேண்டும்.


மேலும், இந்த நாட்டில் பல வருடகால யுத்தம் இந்த மாகாண மக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் நாங்கள் பிளவுபட்டுள்ளோம். இல்லை அரசியல் தேவைக்கேற்ப நாம் பிளவுபட்டுள்ளோம். அரசியல் தேவைகளே அதற்கு வழிவகுத்தது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »