Our Feeds


Monday, June 17, 2024

SHAHNI RAMEES

மாணவி செஹானிக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சர் ஜீவன்..!

 


கடந்த வருடம்(2023) நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையின்

பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்ற நுவரெலியா மாவட்டம் அம்பகமுவ கல்வி வலயத்திற்குற்பட்ட கிணிகத்தேன மத்திய கல்லூரின் மாணவி M.R. செஹானி நவோதயாவுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் மடிக்கணினி வழங்கி வைத்தார்.


கொட்டகலை C.L.F வளாகத்தின் அமைச்சரின் காரியாலயத்திற்கு மாணவியை வரவழைத்து வாழ்த்துக்களை தெரிவித்ததோடு எதிர்காலத்தில் கல்வியிலும், தொழில்நுட்ப பிரிவிலும் சிறந்து விலங்க தனது ஒத்துழைப்பையும் வழங்குவதாக தெரிவித்தார்.




விஷேடமாக அமைச்சர் ஜீவன் தொண்டமானால், ஜனாதிபதிக்கு தொலைப்பேசி வாயிலாக தொடர்பை ஏற்படுத்திய நிலையில், குறித்த மாணவிக்கு, ஜனாதிபதியும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.




மேலும் பரிசில் பெற்ற மாணவி, பாடசாலை அதிபர், மாணவியின் பெற்றோர்கள் அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்கள்.




இந்நிகழ்வில் இ.தொ.கா பிரதி தலைவர் கனபதி கணகராஜ், மாணவி செஹானி நவோதயா, பாடசாலை அதிபர் உப்புல், மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.


ஆர்.எப்.எம்.சுஹெல்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »