Our Feeds


Friday, June 28, 2024

Sri Lanka

மின்சாரம் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் !


இலங்கை மின்சாரம் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று(27) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினர்.

மின்சாரத்தொழிலுக்கான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யும் நோக்கிலான இந்த சட்டமூலம் 2024 ஏப்ரல் 25 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது.

அதனையடுத்து கடந்த 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 44 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய, இந்த சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரம் சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »