இலங்கையில் முதல் தடவையாக தேசிய டின்மீன் உற்பத்தி
நிறுவனமான SLIC நிறுவனத்தினால் அதன் நவீன தயாரிப்பான நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் பாதுகாக்கக்கூடிய ஒரு கிலோ எடை கொண்ட ஜக் மேக்கரல் செமன் ரின்மீன் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று (21) கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.SLIC நிறுவனத்தின முகாமைத்துவப் பணிப்பாளரான கலாநிதி கபில பாலசூரியவினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சம்பிரதாயபூர்வமாக இந்த செமன் ரின் கைளிக்கப்பட்டதுடன், பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு உகந்த வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாலசூரிய அமைச்சரிடம் தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் டக்ளஸ் தெரிவிக்கையில், உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கமெனவும் அதற்காக அனைத்து உதவிகளையும் அரசாங்கம் தேசிய உற்பத்தியாளர்களுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் இதற்கு SLS (இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்) சான்றிதழை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் நிசாந்த விக்கிரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.