Our Feeds


Wednesday, June 19, 2024

Zameera

சுகயீன விடுமுறையில் ஈடுபட இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானம்


 எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

உறுதியளித்தபடி கோரிக்கைகளை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் நடவடிக்கைகளில் இருந்து விலக நேரிடும் என அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஆசிரியர்கள் தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், தற்போதைய சந்ததியினர் அதனை நம்பாமல் தமது கல்வித் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (18) நடைபெற்ற வைபவமொன்றில் தெரிவித்தார்.

இதேவேளை, சம்பளப் பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் சாதகமானதென பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என அதன் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »