Our Feeds


Saturday, June 15, 2024

SHAHNI RAMEES

அனுராதபுரம் வெஸ்ஸகிரிய தொல்பொருள் தளம் “மரபு பூங்காவாக" மாற்றம்

 

வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரம் வெஸ்ஸகிரிய தொல்பொருள் தளத்தை “மரபு பூங்காவாக" மாற்ற தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.



இங்கு வெஸ்ஸகிரியயில் ஆய்வாளர்களுக்கு ஆய்வுப் பணிக்கான வாய்ப்புகளை வழங்குதல், பார்வையாளர்களின் மனநலத்தை உருவாக்குதல், இளைப்பாறும் இடங்களை ஏற்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.



தொல்பொருள் திணைக்களத்தின் அனுராதபுரம் பிரதேச காரியாலயம் வெஸ்ஸகிரியை பாரம்பரிய பூங்காவாக மாற்றுவதற்கான ஆரம்ப கட்டத்தின் ஒரு பகுதியாக 26 ஏக்கர் நினைவுச்சின்னத் தளம் முழுவதையும் கண்காட்சி நிலைக்கு தயார்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது.



வெஸ்ஸகிரியவை பாரம்பரிய பூங்காவாக மாற்றும் நிகழ்வில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் எச்.எம்.பி.பி.ஹேரத்தின் ஆலோசனையின் பேரில் தொல்பொருள் திணைக்களத்தினால் வெஸ்ஸகிரிய மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »