ஐக்கிய அரபு அமீரகத்தில் பாலியல்
துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இச்சட்டத்தின் படி, ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அல்லது அவளது அனுமதியின்றி உடலுறவின் விளைவாக கர்ப்பம் ஏற்பட்டாலோ அல்லது பெண்ணின் உறவினர்களில் ஒருவர் அதற்கு பொறுப்பாக இருந்தாலோ கருக்கலைப்பு அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம் அல்லது பாலுறவு வழக்கு உடனடியாகப் முறைப்பாடு அளிக்கப்பட வேண்டும், பின்னர் பொது வழக்கறிஞரின் அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் மற்றும் மருத்துவ சிக்கல்கள் இல்லாமல் கருக்கலைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.