கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, கல்வி அமைச்சில் திங்கட்கிழமை (10) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெற்றது.
உயிரியல் பாடப்பிரிவில் காலி சங்கமித்த வித்தியாலயத்தைச் சேர்ந்த பஹன்மா உபனி லெனோரா முதலிடத்தையும், பௌதீகப் பிரிவில் கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த சிரத் நிரோதா முதலிடத்தையும், வர்த்தகப் பிரிவில் பாணந்துறை மகளிர் கல்லூரியின் ஷெஹாரா சிதுமினி முதலிடத்தையும், காலி ரிச்மன் கல்லூரியின் தசுன் ரித்மிகா முதலாம் இடத்தையும் பெற்றனர்.
கலைப் பிரிவில் விதானகே, பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்ற கினிகத்தேன மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஷெஹானி நவோத்யா மற்றும் உயிரியல் தொழில்நுட்பப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்ற எஹலியகொட மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கிருலு ஷில்டியா ஆகியோர் கலந்துகொண்டனர்.