பதுளையிலிருந்து கொழும்பு புறக்கோட்டை நோக்கி பயணித்த ரயிலின் இயந்திரத்தேலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
பதுளையிலிருந்து காலை 8.30க்கு பயணக்கத் தொடங்கிய குறித்த ரயிலில், தியதலாவையை கடந்து பயணிக்கும் போது தீ பரவியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
அதனைத் தொடர்ந்து, ரயிலை ஹப்புதலை ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தியதுடன், தீயை கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
ரயில்வே அதிகாரிகள், இலங்கை பெட்ரோலியக் கூட்டுதாபன தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
ரயிலில் தீ பரவும் சந்தர்ப்பத்தில், நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்துள்ளனர்.
எனினும், தீ விபத்து காரணமாக எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ரயில் இயந்திரங்களுடன் பயணித்த இந்த ரயில், திருத்த பணிகளுக்கு பின்னர் தாமதமாக கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது,
ரயிலில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ரயில்வே திணைக்களம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்தவுள்ளது.