இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து சினோபெக் நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
அதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 355 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு 314 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் ஒக்டேன் 95 ரக பெற்றோல் (ரூ.420) மற்றும் சுப்பர் டீசல் (ரூ.377) ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.