நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையின் கிராமப்
புறங்களில் 750 பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டதன் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு ஷங்கிரில்லா விடுதியில் இன்று (03) முற்பகல் நடைபெற்றது.
இலங்கையின் 9 மாகாணங்களில் 210 மில்லியன் யூரோ செலவில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பணிகளின் மூலம் சுமார் 600,000 குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர்.