தனது ஆறு வயது மகளுக்கு கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை பருக்க முயற்சித்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் உள்ள சந்தேக நபரின் மனைவி பணம் அனுப்பாததால் கோபமடைந்த கணவன், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பயமுறுத்துவதற்காக இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் {ஹங்கம, படாட பிரதேசத்தில் வசிக்கும் கூழி தொழிலாளி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு (119) கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம், சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாகவும், சந்தேகநபர் அவ்வேளையில் அதீத மதுபோதையிலிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி பரிசோதனைக்காக அம்பாந்தோட்டைப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.