Our Feeds


Sunday, June 16, 2024

Zameera

ஹஜ் யாத்ரீகர்கள் 6 பேர் வெப்பத்தால் மரணம்


 ஹஜ் யாத்ரீகர்கள் ஆறு பேர் வெப்பத் தாக்குதலால் உயிரிழந்தனர். மக்காவில் 118 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிவுகின்றது

இந்த ஆண்டு வருடாந்திர கூட்டத்தின் போது வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை (118 டிகிரி பாரன்ஹீட்) எட்டக்கூடும் என்று சவுதி அதிகாரிகளின் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இறந்த ஆறு பேரும் ஜோர்டானிய குடிமக்கள் என, ஜோர்டானிய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை (15)  கூறியது, ஜனாஸாக்களை புதைக்கும் நடைமுறைகள், அவர்களின் உடல்களை ஜோர்டானுக்கு மாற்றுவது குறித்து ஜெட்டாவில் உள்ள சவுதி அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்கின்றனர் என்று   சவுதி பொது ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹஜ் என்பது உலகின் மிகப்பெரிய மதக் கூட்டங்களில் ஒன்றாகும் மற்றும் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வு ஆகும்.

இலங்கையைச் சேர்ந்த ஹஜ் யாத்திரிகளுக்கு எவ்விதமான பாதிப்பு இல்லையென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »