மொனராகலை மாவட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் 600 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் "உறுமய" தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் 41,960 பயனாளிகளில் 600 பேருக்கு அடையாள உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு வெல்லவாயவில் ஜனாதிபதியின் தலைமையில் சற்று முன்னர் நடைபெற்றது.