இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 வெளிநாட்டவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலங்கம, மாத்திவெல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவர்கள் இந்தியப் பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட போது, 135 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 57 மடிக்கணினிகள் என்பன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.