Our Feeds


Wednesday, June 19, 2024

Anonymous

ஹஜ் பயணம் மேற்கொண்ட 550 ஹாஜிகள் கடும் வெப்பத்தினால் உயிரிழப்பு | நடந்தது என்ன?

 



இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது 550 பேர் உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது. ஹஜ் யாத்திரையின் போது கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.


உயிரிழந்த 550 பேரில் 323 பேர் எகிப்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் கடுமையான நீரிழப்புக்கு ஆளானதாகவும் சவூதி அரசு தெரிவித்துள்ளது.


புனித யாத்திரை மேற்கொண்டிருந்த யாத்ரீகர்கள் பலர் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.


இதனிடையே, இந்த வாரம் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று சவுதி தேசிய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அய்மன் குலாம் கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.


காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அதிக நேரம் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு சவூதி அரேபிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


இந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது 35 துனிசிய குடிமக்கள் இறந்ததாக துனிசிய செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.


புனித யாத்திரையின் போது பதினொரு ஈரானியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று செனகல் குடிமக்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


புனித யாத்திரையின் போது நூற்று நாற்பத்து நான்கு இந்தோனேசிய குடிமக்கள் இறந்ததாக இந்தோனேசிய சுகாதார அமைச்சின் தரவு செவ்வாயன்று காட்டியுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »