பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (29) 53ஆவது நாளாகவும் தொடர்கிறது.
தமது பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருடன் கலந்துரையாடவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்கங்களின் பொது மாநாடு தெரிவித்துள்ளது.
அதன் இணைச் செயலர் நேற்று (28) இல் கூடிய தொழிற்சங்கங்கள் தொழில் நடவடிக்கையை தொடர தீர்மானித்ததாக ரிச்மன் தெரிவித்தார்.