யேமன் அருகே அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளை நோக்கி 75 பேருடன் சென்றுகொண்டிருந்த குறித்த படகு, வேகமாக வீசிய காற்றில் நிலைகுலைந்து அதிலிருந்தவா்கள் கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்துப் பகுதியிலிருந்து 26 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 49 பேரும் மாயமாகியுள்ளதாக யேமன் கடலோரக் காவல்படையினா் கூறினர்.
மாயமானவா்களில் யாரும் இதுவரை கண்டறியப்படாத நிலையில், விபத்தில் அவா்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.