பிரித்தானியாவில் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே காணப்படும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
சர் கெய்ர் ஸ்டார்மர் தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளதுடன், பொருளாதார வளர்ச்சியின் மூலம் "பிரித்தானியாவை மீண்டும் கட்டியெழுப்புவோம்" என உறுதியளித்துள்ளார்.
மான்செஸ்டரில் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் 14 வருடங்கள் பற்றிய மாற்றம்” என்ற தலைப்பில் ஆவணம் தீர்மானம் மிக்கதான இருக்கும் என தொழிற்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
தொழிற்கட்சித் தலைவர் தனது கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வாக்காளர்களை கவர்ந்திழுக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கொள்கைகளை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசுக்கு சொந்தமான எரிசக்தி முதலீடு மற்றும் உற்பத்தி நிறுவனத்தை நிறுவுதல், மேலதிக பொலிஸ் அதிகாரிகளை பணியமர்த்துதல் மற்றும் அனைத்து பயணிகள் இரயிலையும் தேசியமயமாக்குதல் ஆகியவை இவ்வற்றில் அடங்குகின்றன.
மேலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களாவன,
இங்கிலாந்தில் உள்ள அனைத்து ஆரம்ப பாடசாலைகளிலும் இலவச காலை உணவு அறிமுகப்படுத்தல்.
தேசிய வைத்தியசாலைகளில் புதிய CT ஸ்கேனர்கள் மற்றும் கூடுதல் பல்மருத்துவர் சந்திப்புகளுக்கு நிதியளிக்க 1.6 பில்லியன் ஸ்ட்ரேலிங் பவுண்ட் ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கிலாந்தில் 8,500 மனநலப் பணியாளர்களை நியமிக்கவுள்ளதுடன் கற்பழிப்பு வழக்குகளை விசாரிப்பதற்கு 80 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டவர்கள் மதுபான பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சிகரெட் கொள்வனவு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.