நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இந்த சிகரெட் கையிருப்பை கொண்டு வந்துள்ளார்.
இந்த வர்த்தகர் நேற்று இரவு 10.00 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானமான EK-648 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
38,400 சிகரெட்டுகள் அடங்கிய 192 சிகரெட் அட்டைப்பெட்டிகள் அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இந்த வர்த்தகரை பொலிஸ் பிணையில் விடுவிக்க பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் எதிர்வரும் ஜூன் மாதம் 05 ஆம் திகதி இந்த வர்த்தகர் சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.