சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் 35,000க்கும் அதிகமானோருக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும், கொஸ்கம, சீதாவக்க மற்றும் மாலிம்பட ஆகிய மூன்று பிரதேசங்களில் மட்டும் பாதுகாப்பின்மை காரணமாக மின் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை இன்று (3) பிற்பகல் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணி தொடக்கம் இன்று (3) அதிகாலை வரை 35,000 மின் தடைகள் பதிவாகியுள்ளதாகவும் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, தெனியாய உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பராமரிப்பு பணிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் முடிந்து மின் விநியோகம் சீரமைக்கப்படுமென்றும், சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பராமரிப்புப் பணிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென்றும் தெரிவித்துள்ளது.