சவூதி அரசாங்கம், மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தினூடாக, இலங்கை மக்களுக்கு விநியோகிப்பதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு 300 தொன் பேரீச்சம் பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
11ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இடம்பெற்ற பேரீச்சம் பழங்களை கையளிக்கும் நிகழ்வில் இலங்கைக்கான சவூதி தூதுவர் உஸ்தாத் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த நன்கொடை சவுதி அரேபியாவின் பரந்த மனிதாபிமான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
Dr. MHM Azhar (PhD)