Our Feeds


Sunday, June 2, 2024

ShortNews Admin

30 வருடங்களின் பின்னர் தேர்தலில் பெரும்பான்மை இழந்தது ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்

 

தென்னாபிரிக்காவை நிறவெறியின் பிடியிலிருந்து மீட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் 30 வருடங்களின் பின்னர் தேர்தலில் பெரும்பான்மையை இழந்துள்ளது.

தென்ஆபிரிக்க நாடாளுமன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் சனிக்கிழமை வெளியாகியுள்ள நிலையில் தென்னாபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பெரும்பான்மையை  பெறதவறியுள்ளது.

99வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தென்னாபிரிக்க அரசியலில்30 வருடங்களிற்கு மேல் ஆதிக்கம் செலுத்திய தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில் 40 வீதமான வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளது.

நெல்சன்மன்டேலாவின் தலைமைத்துவத்தின் கீழ் நிறவெறியை முடிவிற்கு கொண்டுவந்த பின்னர் இடம்பெற்ற 1994ம் ஆண்டு தேர்தலிலும் அதன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களிலும் கட்சிக்கு கிடைத்த ஆதரவுடன்ஒப்பிடும் இம்முறைகட்சிக்கு குறைந்த ஆதரவே கிடைத்துள்ளது.

கடும்வறுமை சமத்துவம் இன்மை ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள தென்னாபிரிக்காவிற்கு இது முக்கியமான திருப்புமுனை என எதிர்கட்சிகள் தேர்தல் முடிவை வரவேற்றுள்ளன.

பெரும்பான்மையை இழந்துள்ள போதிலும் தென்னாபிரிக்க தேசிய காங்கிரசே தொடர்ந்தும் நாட்டின் பெரும் கட்சியாக காணப்படுகின்றது.

எனினும் ஆட்சியில் தொடர்ந்து நீடிப்பதென்றால் இரண்டாவது தடவையாக சிரில்ரமபோசவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதென்றால் அந்த கட்சிக்கு ஏனைய கட்சிகளின் ஆதரவு தேவைப்படும்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பெரும்பான்மையை இழக்கச்செய்வதன் மூலமே தென்னாபிரிக்காவை காப்பாற்ற முடியும் நாங்கள் அதனை செய்துள்ளோம் என பிரதான எதிர்கட்சியின் தலைவர் ஜோன் ஸ்டீன்ஹ_சைன் தெரிவித்துள்ளார்.

பிரதான எதிர்கட்சியான ஜனநாய கூட்டணி கட்சிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »