எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை புதிய வாக்காளர் பட்டியலின் கீழ் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜூலை 15ஆம் திகதிக்குள் இறுதிப் பட்டியலில் கையெழுத்திட ஆணையம் செயல்பட்டு வருகிறது.
2023ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலைக் காட்டிலும் இந்த ஆண்டு புதிய வாக்காளர்கள் இரண்டு லட்சம் பேர் அதிகரிப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.
அடுத்த மாதம் 17ஆம் திகதி முதல் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றுக்கொள்ளும் எனவும், அந்த மாத இறுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஆணைக்குழு வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது