நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.சம்பள முரண்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.