2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடாத்த திட்டமிட்டுள்ள நிலையில், பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை தற்போது இணையவழி முறை மூலம் சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த விண்ணப்பங்களை ஜூலை 10ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை வரை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையத்தில் சமர்ப்பிக்கின்றமையினால் தங்களுடைய விபரங்களை உரிய முறையிலும் அறிவித்தலை முழுமையாக வாசித்து விளங்கிக்கொண்டு தெளிவாக பூர்த்திசெய்து அனுப்புதல் வேண்டும் எனவும் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் ‘www.doenets.lk’ அல்லது ‘www.onlineexams.gov.lk’ மூலம் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.